Thiruppoor guna

Thiruppoor guna

 நாம வந்து என்ன சவாலை எதிர்கொள்றோம் அப்படிங்கிற வகையில வந்து தத்துவார்த்த நிலையிலயா அரசியல் நிலையிலயா அமைப்பு நிலையிலயா அல்லது வந்து நடைமுறை நிலையிலயா அப்படின்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி

 இந்திய நாட்டினுடைய நிதி அமைச்சரா இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் இருக்காங்க இல்ல அவங்களுடைய கணவர் பெயர் வந்து பர்கலா பிரபாகர் அவர் வந்து ஒரு பொருளாதார ஆய்வாளரும் கூட அவர் வந்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்காப்ல 

அந்த கட்டுரையோட தலைப்பு என்னன்னு சொன்னா நிம்மதியை இழக்கும் இந்தியா அப்படிங்கறது 

அவர் எங்க அதை தொடங்குறாருன்னு சொன்னா இந்த நாட்டினுடைய பொருளாதார கொள்கை என்ன இருக்குதுன்னு சொன்னா

 இங்க ஆட்சியில இருக்கிறவங்க தங்களுடைய நண்பர்களுக்கு ஐந்து விமான நிலையங்களை பரிசாக அளிக்கிறார்கள் 

ஆனால் இந்த நாட்டுக்காக உழைச்சு சாகுற மக்களுக்கு வெறும் ஐந்து கிலோ கோதுமையை வழங்குகிறார்கள் அப்படின்னு தொடங்குறாரு

 ரொம்ப அருமையான கட்டுரை 

அவர் மட்டும் இல்ல இந்தியால உலக அளவில் இருக்கக்கூடிய பொருளாதார நிபுணர்கள் எல்லாருமே வந்து இந்தியாவினுடைய பொருளாதார எதிர்காலம் வந்து மிக மோசமாக இருக்கும் அப்படின்னு ஒரு அச்சுறுத்தலை சமீப காலமாக வந்து ஓங்கி பேசிட்டே இருக்காங்க

 தோழர் ரொம்ப லேட்டா இருந்தாலும் கூட வந்து எல்லா தோழர்களுக்கும் முதல்ல வந்து மேனாள் வாழ்த்துக்கள் நான் வந்து நேரா தலைப்புக்குள்ளார வந்துறேன் 


100வது ஆண்டை சந்திக்கிற கம்யூனிஸ்ட்கள் முன்னால் உள்ள சவால்கள் அப்படிங்கறதுதான் இன்றைய பேச்சோட தலைப்பு


 நான் வந்து இந்த விஷயத்தை சொல்லும்போது நமக்குள்ளார ஆயிரம் பெருமைகள் எல்லாம் இருக்கும் இருந்தாலும் வந்து எனக்கு வந்து தீராத வேதனை தான் இருக்குது 

என்னன்னு சொன்னா இப்ப எலக்சன் நடந்துட்டு இருக்குது தமிழ்நாட்டுல முடிஞ்சிருச்சு கேரளால முடிஞ்சிருச்சு கர்நாடகால பாதி முடிஞ்சிருக்குது இது மாதிரி வந்து பல பகுதிகள்ல முடிஞ்சு இன்னும் வந்து அஞ்சு கெட்ட தேர்தல் இருக்குது நீங்க வந்து இங்க வந்து பேசுபொருள் அப்படின்னு சொன்னா 


ஒன்னு பிஜேபி ஆர்எஸ்எஸ் அதாவது மோடி அல்லது வந்து காங்கிரஸ் கூட்டணிங்கிற பேர்ல வந்து ராகுல் காந்தி இந்த நாட்டுல வந்து மக்களுடைய பிரச்சனையை வந்து முன்வைச்சு மற்றவங்க வந்து மறுப்பு தெரிவிக்க முடியாத வகையில வந்து ஒரு ஆளுமையோட சமூகத்தை அதிர்வுற செய்யக்கூடிய வகையில வந்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் பேசின காலமே இல்லை 


தோழர் அதெல்லாம் பழைய காலம் எங்கேயோ நாம வந்து எல்லாத்தையும் இழந்துட்டோமோன்ட்டு யோசிச்சு பாருங்க

 தமிழ்நாட்டுல தேர்தல் நடந்துச்சு இது தேர்தல்ல வந்து நட்சத்திர பேச்சாளர்கள் தான் மக்களை கவர்றவங்களா இருந்தாங்க

 மக்கள் மத்தியில வந்து கருத்துக்களை கொண்டு போய் சேர்க்கிறவங்களாக இருந்தாங்க 

எனக்கெல்லாம் பெரிய வருத்தம் என்னன்னா நேத்தைக்கு முளைச்ச அந்த மக்கள் நீதி மையம் கமலஹாசன் வந்து சிறப்பு பேச்சாளர் தோழர் நட்சத்திர பேச்சாளர் தமிழ்நாட்டினுடைய எல்லா தொகுதிக்கும் போய் அவர் வந்து பேசிட்டு இருந்தாரு அவர் வந்து அங்கீகரிக்கப்பட்டார்


 ஆனா நம்ம ஆளுங்க நீங்க தேர்தல்ல நிக்கக்கூடிய ரெண்டு கட்சிகள் ஆதரவு செலுத்தக்கூடிய நீங்க லிபரேஷன் வரைக்கும் இந்த தலைவர்கள் எல்லாம் சமுதாயத்துல ஒன்னு சொன்னா அது வந்து தீப்பொறியை கிளப்பும்

 அதனால வந்து மக்கள் மத்தியில ஒரு ஒரு மாற்றத்தை உருவாக்கும் அப்படிங்கிற நம்பிக்கையை ஆளு வர்க்கத்துக்கு நம்ம ஆளு வர்க்கத்துக்கும் அளிக்க முடியல மக்களுக்கும் அளிக்க முடியல


 எந்த அளவுக்கு நாம வந்து பின்தங்கி போயிருக்கிறோம் அப்படிங்கிற இடத்துல இருந்து தான் நான் வந்து இது வந்து தமிழ்நாட்டுல நடந்த தேர்தல் மட்டும் இல்ல 

கேரளால வந்து அங்க இருக்கக்கூடிய தோழர்கள் எல்லாமே வந்து சிறப்பாக பண்ணாங்க 

அதை நாம அன்றாடம் பார்த்துட்டு இருக்கிறோம் நாங்க அங்க இருக்கக்கூடிய தோழர்கள் மூலமாக சிறப்பான அவங்க வகையில வந்து கவரேஜ் பண்ற வீடியோ ஆடியோ எல்லாமே கேட்டுட்டு இருக்கிறோம் 


அங்க வந்து கட்சி இருக்குது ஆட்சி இருக்குது அதனால அங்க ஓரளவுக்கு அது நடந்துட்டு இருக்குது 


ஆனா தமிழ்நாட்டிலும் இல்ல இந்தியா முழுக்கவும் இல்லை


 தோழர் நாம தேர்தல் அரசியல்ல நிக்கிறோம்னா தேர்தல் அரசியலுக்கான குறைந்தபட்ச தகுதிகளை வளர்த்துக்கணும்ங்கிறது கூட நம்ம தலைமைகள்ட்ட போயிடுச்சு 

அப்படிங்கிற சோகத்தை வந்து நான் அனுபவிக்கிறேன்

 மற்ற தோழர்கள் எல்லாம் என்ன கருதுறீங்கன்னு தெரியல

 இந்த இடத்திலிருந்து தான் நாம வந்து இன்னைக்கு நூறாண்டு காலம் ஆகக்கூடிய தோழர் முன்னுரை அதாவது முதல்ல அறிமுக உரை நிகழ்த்தின தோழர் கூட பேசினபோது 

இந்தியாவுல வந்து ரெண்டு இயக்கங்கள் வந்து 100வது ஆண்டை வந்து எதிர்கொள்ளுது

 ஒன்னு வந்து நாம கம்யூனிஸ்ட்

 இன்னொன்னு வந்து இந்துத்துவ சக்திகள் ஆர்எஸ்எஸ் அவன் வந்து இன்னைக்கு எல்லா துறையிலும் கோலோச்சி எல்லா துறையிலும் எல்லா துறையிலும் தொழர் அதாவது வந்து தேர்தல் அரசியல் மூலமா அதிகாரத்தில் இருக்கிறாப்ல

 உண்மையிலேயே இந்த நாட்டினுடைய அதிகார வர்க்கங்கள்னு சொல்லக்கூடிய உயர் அதிகார இதுல எல்லாத்துலையுமே அவங்கதான் இருக்கிறாங்க

 ராகுல் காந்தி கூட ஒரு ரெண்டு நாள் முன்னாடி ஒரு டேட்டாஸ் கொடுத்திருந்தாப்ல அதாவது வந்து செக்ரட்டரியேட்ல மத்திய அமைச்சகத் துறையில் இருக்கக்கூடிய செயலர்களுடைய எண்ணிக்கையில வந்து 93 பாயிண்ட் வந்து அவங்க உயர்நிலை உயர் சாதியினர் தான் இருக்கிறாங்க வகையில முழுக்க அவங்க வச்சுக்கிறாங்க 

அதனாலதான் அவங்களால வந்து எல்லா துறையையும் நீதித்துறையை ஐடி துறையை எல்லாத்தையுமே வந்து அவங்களால வந்து ஏவ முடியுது 

அப்படி அவங்க எல்லாத்துலையுமே அதிகார வர்க்கமாக நிறைஞ்சிருக்காங்க நாம இந்த மக்களுக்காக லட்சக்கணக்குல இந்த தோழர்களை பலி கொடுத்த அப்படித்தானே நாம வந்து சுதந்திர போராட்டத்தின் போதா இருந்தாலும் சரி வீர தெலுங்கானா போராட்டத்தின் போதா இருந்தாலும் சரி தஞ்சை மாதிரியான கிளர்ச்சிகள்ல இருந்தாலும் சரி ஒரு கம்யூனிஸ்ட் என்கிற வகையில வந்து பொதுவாக கணக்கெடுத்தால் நக்சல் பாரி இயக்கத்தினுடைய எழுச்சியில் இருந்தாலும் சரி இன்னைக்கு வரைக்கும் வந்து பழங்குடிகளுக்காக உயிரை கொடுக்கக்கூடியவங்களாக இருந்தாலும் சரி லட்சக்கணக்குல நம்ம உயிரை பலி கொடுத்துருவோம் 

அவன் ஒருத்தனை கூட பலி கொடுக்கல தொழ இன்னும் சிறப்பாக கூட நம்ம சொல்லுவோம் பூட்ஸ் நக்கின்னு சொல்லுவோம்

 அவனை ஆனா அவன் வந்து அதிகாரத்தில் இருக்கிறான் நாம வந்து சமுதாயத்தின் அரசியல் நிலையில வந்து ரொம்ப கீழான நிலைக்கு போயிட்டோம் அப்படிங்கிற வேதனையோட தான் இந்த உரையை நான் தொடங்கணும்னு நினைக்கிறேன் சரி


 நாம வந்து என்ன சவாலை எதிர்கொள்றோம் அப்படிங்கிற வகையில வந்து 

அது தத்துவார்த்த நிலையிலயா 

அரசியல் நிலையிலயா 

அமைப்பு நிலையிலயா அல்லது வந்து

 நடைமுறை நிலையிலயா 

அப்படின்னு யோசிக்கிறதுக்கு முன்னாடி


 இந்திய நாட்டினுடைய நிதி அமைச்சராக இருக்கக்கூடிய நிர்மலா சீதாராமன் இருக்காங்க இல்ல அவங்களுடைய கணவர் பெயர் வந்து பர்கலா பிரபாகர் அவர் வந்து ஒரு பொருளாதார ஆய்வாளரும் கூட ஒரு வாரத்துக்கு முன்னாடி நினைக்கிறேன் அவர் வந்து ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்காப்ல 


அந்த கட்டுரையோட தலைப்பு என்னன்னு சொன்னா நிம்மதியை இழக்கும் இந்தியா அப்படிங்கறது 


அவர் எங்க அதை தொடங்குறாருன்னு சொன்னா இந்த நாட்டினுடைய பொருளாதார கொள்கை என்ன இருக்குதுன்னு சொன்னா இங்க ஆட்சியில இருக்கிறவங்க தங்களுடைய நண்பர்களுக்கு ஐந்து விமான நிலையங்களை பரிசாக அளிக்கிறார்கள் ஆனால் இந்த நாட்டுக்காக உழைச்சு சாகிற மக்களுக்கு வெறும் ஐந்து கிலோ கோதுமையை வழங்குகிறார்கள் அப்படின்னு தொடங்குறார்


 ரொம்ப அருமையான கட்டுரை


 அவர் அதுல அவர் மட்டும் இல்ல இந்தியாவில் உலக அளவில் இருக்கக்கூடிய பொருளாதார நிபுணர்கள் எல்லாருமே வந்து இந்திய பொருளாதார உலகப் பொருளாதாரத்தை ஆய்வு பண்ணக்கூடியவங்க கூட அதுல இந்தியாவினுடைய பொருளாதார எதிர்காலம் வந்து மிக மோசமாக இருக்கும் அப்படின்னு ஒரு அச்சுறுத்தலை சமீப காலமாக வந்து ஓங்கி பேசிட்டே இருக்கிறாங்க

 பொருளாதாரக் கொள்கை அப்படின்னு சொன்னா நாம என்ன எடுத்துக்கிறது அப்படிங்கிற போது ஒரு சின்ன அறிமுகத்தோட போயிடலாம் அப்படின்னு நினைக்கிறேன் 

ஒரு நாட்டினுடைய பொருளாதாரக் கொள்கைங்கிறது வந்து அது முதன்மையாக அந்த நாட்டில் நடக்கக்கூடிய

 தொழில் மற்றும் வர்த்தகம் விவசாயம் இந்த மூணையும் சார்ந்ததாக இருக்குங்கிறது அடிப்படை

 அதை தாண்டி பொருளாதார கொள்கையில வந்து ஒரு நாட்டினுடைய பாதுகாப்பு ராணுவச் செலவு அந்நிய செலாவணியை கையிருப்பு வைக்கிறது

 இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இதுக்கான துணை இதுதான் 

ஆனா அடிப்படை என்னன்னு சொன்னா அதுல வந்து முதலாளிகளுக்கு லாபத்தை உறுதிப்படுத்துவதோடு மக்களுக்கு வந்து தொழில்ல வந்து பங்கேற்கிறதுக்கான வாய்ப்புகளையும் உத்தரவாதப்படுத்துறதுக்கு பேர்தான் வந்து பொருளாதாரக் கொள்கை அப்படின்னு சொல்றது 

அதை வந்து குறிப்பிட்ட காலத்துல வந்து இந்தியா மட்டுமில்ல உலகத்துல பெரும்பான்மையான நாடுகள் வந்து நிராகரிச்சிருச்சு அப்படிங்கறத வந்து பல்வேறு பொருளாதார அறிஞர்கள்

 இப்ப பேசுறாங்க பிரான்ஸ்ல இருந்து ஒருத்தர் என்ன சொல்றாருன்னு சொன்னா இந்தியா போயிட்டு இருக்கக்கூடிய பொருளாதார கொள்கைங்கிறது வந்து ஒரு 10 ஆண்டுகள்ல மிஞ்சி போனா வந்து ஒரு 12 13 ஆண்டுகள்ல வந்து அது மிகப்பெரிய சரிவை சந்திக்கும் 

அதனுடைய அளவு என்னவா இருக்கும்னு சொன்னா கிட்டத்தட்ட 33% கொண்டிருக்கும் அப்படின்னு சொல்றாப்புல ஏன் அப்படின்னு சொல்லும்போது வந்து இப்ப இல்ல இந்த பிரச்சனை அது வந்து

 1990 க்கு பின்னாடி முன்னாடியே பொருளாதாரக் கொள்கைகள் எல்லாம் வந்து நாட்டினுடைய ஸ்திரத்தன்மையை உத்தரவாதத்தை வந்து சீர்குலைக்கிறதா மாறிடுச்சு

 அதாவது வந்து என்ன பண்றாங்கன்னா பணக்காரர்களை மேலும் மேலும் பணக்காரர்கள் ஆக்குவது ஏழைகளை வந்து மீண்டும் மீண்டும் ஏழைகளா மாத்துறது அப்படிங்கறதுதான் நீங்க அதுதான் வந்து எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் 

இந்தியால வந்து ஒட்டுமொத்த சொத்து இந்திய சொத்துல வந்து 1% பேர் வந்து கிட்டத்தட்ட 40% மேலான சொத்தை வச்சிட்டு இருக்காங்க அப்படிங்கிற புள்ளி விவரம் 

அதே அதே மாதிரி வந்து நீங்க பார்த்தீங்கன்னா ஒரு 66% படித்த இளைஞர்களுக்கு அவங்க படிச்சதுக்கான வேலையே இல்ல அப்படிங்கிற நிலைமை 

அதைப்பற்றி பொருளாதார அறிஞர்கள் இன்னும் கூர்மையா சொல்லும்போது

 அதுலயும் வந்து அந்த பரகல பிரபாகர் அவர் நிதி அமைச்சருடைய கணவர் அவர் சொல்லும்போது என்னன்னு சொன்னா 

இந்தியாவை வெள்ளைக்காரர்கள் கொள்ளையடித்ததை விட மோசமாக இன்றைய கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்கிறார்கள் அப்படிங்கிறாப்ல

 அது அளவே இல்ல

 மக்களுடைய வளங்கள் முழுக்க கேள்வி கேட்கிறதுக்கு நாதி இல்லாம வந்து கொள்ளையடிக்கப்படுது 

அதாவது வந்து மக்களுக்கு வந்து வேலை வாய்ப்பை உருவாக்குறதை பற்றி அதை பத்தி எல்லாம் எந்த கவலையுமே இல்லை இப்படியே போச்சுன்னா 

இன்னொரு பொருளாதார அறிஞர் என்ன சொல்றாருன்னு சொன்னா அவர் சொல்லக்கூடிய வார்த்தை ரொம்ப முக்கியமான விஷயம் தோழர் தோழர்கள் கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கோங்க 

நாமெல்லாம் எதிர்காலத்துல வந்து கார்ப்பரேட் ஜமீன்தார்களிடம் அடிமையாகி விடுவோம் அப்படின்றாப்ல அதாவது வந்து இங்க வந்து நாம ஒரு முதலாளித்துவத்துக்கு நான் ஏற்கனவே பேசும்போது சொன்னேன்ல

 முதலாளித்துவம்னு சொன்னா அதுக்கு ஒரு குறைந்தபட்ச ஜனநாயக கடமைகள் இருக்குது அப்படிங்கறது எல்லாத்தையும் வந்து அது கை கழுவிருச்சு 

அப்படிங்கறதுதான் அப்ப வளர்ச்சின்னா இப்ப இங்க வந்து இதெல்லாம் நடக்குது நமக்கு வந்து ஒரு பக்கத்துல மக்கள் எல்லாம் வந்து துன்ப துயரத்துக்குள்ளார போயிட்டு இருக்காங்கன்னு சொல்றாங்களே ஆனா வந்து மக்கள்ட்ட வந்து பெரிய கோபம் வெளிப்படல 

அதே நேரத்துல வந்து இன்னொரு பக்கத்துல வந்து பொருளாதார வளர்ச்சி மேலோங்கிட்டு போகுது அப்படின்னு சொல்லும்போது அந்த ஆய்வறிஞர்கள் எல்லாம் என்ன சொல்றாங்கன்னா 

அவங்க ஒரு குறிப்பிட்ட விஷயங்களை இது பண்றாங்க அதாவது வந்து முதலாளித்துவம் உற்பத்தி துறையில மனித ஆற்றலை உள்ளிழுக்கிற உற்பத்தி முறையை அடியோடு கைவிட்டு விட்டது

 புரியுது இல்ல 

அதே மாதிரி அது அதுக்கு என்ன பண்ணுதுன்னு சொன்னா அது முதன்மையாக அதி தொழில்நுட்ப கருவிகளின் மூலம் மனித ஆற்றலை அப்புறப்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வச்சிருக்குது அதுக்கு இன்னைக்கு

 அவங்க சொல்லக்கூடிய உதாரணம் வந்து ஏ இருக்கு இல்லைங்களா இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்

 சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதை வந்து சொல்றாங்க அப்புறம் மூலதனங்கள் எல்லாம் எதை தான் வந்து குறிக்கோளா வைக்கும் இப்ப இந்த அலைக்கற்றை இயற்கை வளங்கள் எரிவாய்வு உட்பட நம்ம நாட்டுல நம்ம ஊர்ல கிடைக்குதுன்னு சொல்றாங்க இல்லையா மீத்தேன் 

இது மாதிரியான இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிறதுக்கும் அதே மாதிரி இந்த இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிறதுக்கும் அவங்க தயாரித்த பொருட்களை சந்தையில் கொண்டு வந்து சேர்ப்பதற்குமான உள்கட்டுமானம் இதை மட்டும்தான் அவங்க குறிக்கோளை வச்சிருக்காங்க 

பறந்துபட்ட மக்களை வந்து உற்பத்தி துறையில ஈர்க்கக்கூடிய வகையில எல்லா துறையையுமே சமமாக வளர்த்துற போக்கு வந்து முதலாளித்துவத்துல இல்லை 

ஆகையினால முதலாளித்துவம் வந்து பயங்கர நெருக்கடியாதான் இருக்குது 

ஆனா அவன் கொள்ளை அடிச்சிட்டே இருக்கிறான் அதை வந்து தட்டி கேட்க முடியாத அளவுக்கு வந்து மக்கள் வந்து இன்னொரு வகையில வந்து ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் அப்படின்றாப்ல எப்படி அந்த இந்த நெருக்கடி எல்லாம் அவங்க இது பண்றதுக்கு இது பண்றாங்க அப்படின்னு சொல்லும்போது

 முதலாவதாக அவங்க சொல்றது என்னன்னா காலாகாலமாக மக்கள்ட்ட வந்து ஒரு பழக்க வழக்கம் இருந்துச்சு 

அது என்னன்னு சொன்னா எவ்வளவு அடிமட்டத்தில் இருக்கக்கூடிய மக்களாக இருந்தாலும் சிறு சேமிப்பு அப்படிங்கறத அவங்க வச்சிருப்பாங்க இந்த சிறு சேமிப்பு தான் உண்மையிலேயே ஒரு நாட்டினுடைய மைய வங்கி மத்திய வங்கி ரிசர்வ் பேங்க் நம்ம சொல்றோம்ல

 அது எல்லாத்தையும் விட அந்த நாட்டை வந்து பாதுகாக்க கூடிய அம்சம் எவ்வளவு நெருக்கடி ஆனாலும் கூட அவங்க வந்து அந்த சிறு சேமிப்புகள் அவங்களை கொஞ்ச நாள் உயிரோட வச்சிருக்கும் அப்படின்றாப்ல அந்த சேமிப்பு முறையை இன்றைய முதலாளித்துவம் உறிஞ்சி காலி பண்ணிட்டு இருக்குது அவங்கள வந்து செலவாளி சமூகமாக மாற்றிட்டு இருக்குது அதுக்கு முதல்ல என்ன பண்ணாங்கன்னு சொன்னா

 இந்த மக்கள்ட்ட வந்து நுகர்வு கலாச்சாரத்தை வந்து கட்டவிழ்த்து விட்டாங்க நுகர்றது தான் வாழ்க்கையில வந்து ஒரு பெருமிதத்துக்குரியது ?


நீங்க வந்து சாதாரணமா ஒருத்தங்க வந்து பேசுறது கேட்கணும் அப்புறம் வந்து தகவல் தொழில்நுட்பத்துக்கு வேணும் அப்படிங்கறதுக்கு வந்து ஒரு குறைந்தபட்ச விலை உள்ள ஒரு செல்போன் இருந்தா போதும்

 ஆனா நம்மகிட்ட ₹10000 போனும் வச்சிருக்கிறவங்க இருக்கிறாங்க 10 லட்சம் ரூபாய்க்கு போன் வச்சிருக்கிறவங்களும் இருக்கிறாங்க 

இப்படி வந்து நுகர்வு கலாச்சாரம் வந்து ஊக்குவிக்கப்பட்டிருக்குது அப்புறம் நீங்க பணத்தை வந்து கையில வச்சு நம்ம வீட்ல வந்து தோழர்கள் பெண் தோழர்கள் எல்லாம் இருப்பாங்க இல்ல அக்கா அம்மா சகோதரிகள் எல்லாம் இருப்பாங்க இல்ல அவங்க எல்லாம் வந்து அஞ்சலப்பெட்டியில அந்த பலசரக்கு பெட்டியில எல்லாம் சேமிச்சு வைப்பாங்க 

பாருங்க அரிசி பானையில சேமிச்சு வைக்கிறது கடுகுடப்பாலை சேமிச்சு வைக்கிறது இந்த முறையெல்லாம் மாத்தி அவங்ககிட்ட இருந்து பணத்தை பறிக்கிற நடவடிக்கையை திட்டமிட்டு செஞ்சது 

அதை என்ன சொல்றாங்கன்னா இந்தியாவில் அது பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது மக்கள்ட்ட எல்லாம் ஏதோ ஒரு பொய்யை சொல்லி அவங்க பணத்தை எல்லாம் வங்கியில கொண்டு வந்து போட சொல்லி அப்புறம் அவனுக்கு செலவழிக்க முடியாத வகையில வந்து ₹2000 நோட்டை கொடுத்து ₹2000 நோட்டை கொண்டு போய் நீ உங்க ஒரு கடையில ஒரு ₹100 சாமான் வாங்குனீங்கன்னா அதுக்கு வந்து அவன் சில்றை கொடுக்க முடியாதுங்கிற செயற்கையான நெருக்கடியை உருவாக்கி நீ தவிர்க்க முடியாம வந்து ஆன்லைன் பரிவர்த்தனைக்கு போ அப்படிங்கறதன் மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிச்சது


 அந்த ஆன்லைன் பரிவர்த்தனை ஆன பிறகு மக்கள் என்ன ஆகுறாங்கன்னு சொன்னா நிதானம் இல்லாத செலவாளிகளாக மாறுறாங்க 

இப்படி சேமிப்பு சமூகமாக இருந்ததை செலவாளி சமூகமாக மாற்றியதன் மூலமாக மக்களை வந்து தங்களை சுரண்டுறாங்க தங்களுக்கு வந்து பிரச்சனையை ஒரு பொருளாதார நெருக்கடி இருக்குது இந்த பொருளாதார நெருக்கடி எல்லாம் நம்ம எதிர்கொள்

ள முடியாம ஆகுது நாளைக்கு வந்து சிக்கலாச்சுன்னா கையில நாலு காசு இல்ல அப்படிங்கிற கவலை இல்லாத மனிதர்களாக மாற்றி அவங்களுடைய பொறுப்பை முழுக்க வந்து வந்து இழக்கச் செய்தது 

இது எல்லாத்தையும் தாண்டி என்ன சொல்றாங்கன்னு சொன்னா நீங்க முன்னாடி எல்லாம் வந்து நமக்கு ஏதாவது செய்யணும் அப்படின்னு சொன்னா அவங்க என்ன பண்ணுவாங்க வீட்ல வந்து அப்பா அம்மால இருந்து சகோதர சகோதரிகள்ல இருந்து ஒரு யாரா இருந்தாலும் வந்து நம்ம பிள்ளைக்கு ஒரு கால் பவுன் நகை எடுக்கணும் ஒரு நல்ல துணியை வாங்கி கொடுக்கணும் வெளியூருக்கு போறதுக்கு அவருக்கு ஏதாவது ஏற்பாடு செய்யணும் இந்த வாட்டி வந்து எங்கயாவது கூட்டிட்டு போகணும் எதுவாக இருந்தாலும் அவங்க வந்து சேர்த்து வச்சு சேரட்டும் இந்த நாள்ல நான் எல்லாம் வந்து என்ன மாதிரி பல பேரு உங்களையும் பல பேர் இருப்பாங்க


 தீபாவளியானா கறி திங்கலாம் இதுதான் சமூக நடவடிக்கை அப்படி வந்து கறி திங்குறது தப்பு சொல்றதுக்காக சொல்ல ஒரு பிளானிங் லைஃப் இருந்ததுங்கிறதுக்காக அந்த பிளானிங் லைஃப் எல்லாத்தையுமே குறைச்சு எதை வேணாலும் உடனே அடையலாம் அப்படிங்கிற வகையில வந்து இன்ஸ்டால்மென்ட்ல வந்து எல்லாத்தையும் வாங்குறது

 அப்படிங்கிற வகையில செலவாளி சமூகமாக மட்டுமில்லாம இந்த சமூகத்தை கடனாளி சமூகமாகவும் மாத்தி வச்சிருக்குது

 இது மிகப்பெரிய ஒரு பள்ளத்தை மக்கள் மத்தியில உருவாக்கி இருக்குது இதை தான் வந்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்து பார்த்தா

 மக்களுடைய சேமிப்பு திறன் வந்து ரொம்பவும் கீழ போயிடுச்சு இது நாட்டினுடைய பொருளாதாரக் கொள்கையை வலுவிளக்க செஞ்சிருச்சு அப்படிங்கிற ஒரு ஆய்வறிக்கை உங்களுக்கு வந்திருக்கும் 

இதுல இந்த அரசு என்ன செய்யுதுன்னு சொன்னா முதலாளிகளை என்ன பண்ணுதுன்னா அதுக்கு வந்து பணத்தை அள்ளி அள்ளி கொடுக்குது 

அவன் பணக்காரன் ஆகுறதுக்கு மக்களை கொள்ளை அடிக்கிறதுக்கு மட்டும் இல்லாம மேலும் பணக்காரன் எங்க எங்கேயும் உற்பத்தியில வந்து பெரிய இது இல்ல பொருளாதார மந்தம் உங்களுக்கெல்லாம் தெரியும்

 2008ல நடந்த பொருளாதார மந்திரம் என்கிறது இன்னைக்கு வரைக்கும் தீர்க்க முடியல பொருளாதார நெருக்கடி அப்படியே இருக்குது 

ஆனா தனிப்பட்ட வகையில கார்ப்பரேட்டுகளுடைய செல்வம் மட்டும் வந்து என்ன ஆயிட்டு இருக்குதுன்னு சொன்னா வளர்ந்துட்டே இருக்குது 

அது எப்படி வளருது அப்படின்னு கேட்டா ஒரே ஒரு விஷயத்தை தான் அவங்க வந்து நறுக்குன்னு சொல்றாங்க கடனை அடிப்படையாக கொண்டது தான் இன்னைக்கு இருக்கக்கூடிய முதலாளித்துவம் 

அது வங்கியில வந்து இஷ்டத்துக்கு கடன் வாங்குது அவங்களுக்கு கடன் கொடுக்குறதுக்கு வந்து அளவில்லை அப்புறம் வாரா கடன் வகை வந்து அவங்களுடைய கொடுத்த கடனை திரும்பி வாங்குறது இல்ல 

அப்புறம் வந்து அவங்களுக்கு வட்டி கிடையாது வரி கிடையாது எதுவும் கிடையாது 

அந்த வரி இல்லாத நிலைமையை உருவாக்குறதுக்கு இந்தியாவுல ஜிஎஸ்டின்னு ஒன்னு கொண்டு வந்தாங்க இல்ல அது கொண்டு வரும்போது ஒரே நாட்டுல ஒரு வரிதானே இருக்கணும் அப்படிங்கிற வகையில ஏதோ வந்து பெரிய தியரி ஒன்னு முன் வச்சாங்க அப்படி ஒரு மாயையை மக்கள் மத்தியில கட்டமைச்சுக்கிட்டு அவங்க பண்ண

 அயோக்கியத்தனம் என்னன்னா பெரும் நிறுவனங்களுக்கெல்லாம் வரியிலிருந்து வரி விளக்கு அப்படிங்கறது 

அளிக்கிறதுக்கும் சராசரி மக்கள் நடுத்தர வர்க்கம் சிறுகுரு தொழில் தொழில் முனைவர்கள் வணிகர்கள் இவங்க கிட்ட எல்லாம் கொள்ளையடிக்கிறதுக்குமான வகையில அந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை வந்து 850 முறை திருத்தப்பட்டிருக்குது

 நம்ம ஆளுங்க ஏதாவது அதை பத்தி இது பண்றாங்கன்னு பாருங்க சரி இதெல்லாம் வந்து முதலாளிகள் லாபம் அடையறதுக்கு மக்கள் கொள்ளை அடிக்கப்படுவதற்கு ஒரு அரசு இயங்கணும்னா ஒரு நாட்டுல நடக்கக்கூடிய பொருளாதார உற்பத்தி முறையின் மூலமாக அதுல வரக்கூடிய வருவாய் மூலமாக ஒரு அரசு இயங்கணும் 

ஆனா அரசு என்ன பண்ணிடுச்சுன்னா உற்பத்தி துறையிலிருந்து தனக்கு வரக்கூடிய வரியை எல்லாம் வருவாய் எல்லாத்தையுமே வந்து ஆளு வர்க்கத்துக்கு மேலும் மேலும் சலுகையாக கொடுத்துருச்சு 

அப்புறம் அரசு மட்டும் எப்படி இயங்குது அரசுகளும் கடன்கார அரசுகளாக மாற்றப்பட்டிருக்குதுங்கிறதுதான் பொருளாதார அறிஞர்கள் சொல்லக்கூடிய மிகப்பெரிய ஆபத்து 

தொடன் கிட்டத்தட்ட இந்தியா 205 லட்சம் கோடி ரூபாய் கடன் வச்சிருக்குது 

ஓகேவா இந்த கடனுக்கு ஆண்டுக்கு 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாய் வரைக்கும் அது டாலர் மதிப்பு ஏற்ற இறக்கத்தின் மூலமாக அந்த தொகை வந்து கூடும் குறையும் ஓகேவா இதுக்கு இதுக்கு கடன் வாங்கணும் இந்த வட்டி கட்டுறதுக்கே இவங்க என்னதான் பண்ணி இது பண்ணனும் கடன் வாங்கி தான் பண்ண முடியும் அதை தாண்டி

 இதுவரைக்கும் மக்கள் நலன்ல இருந்து ஒரு குறிப்பிட்ட அளவுல வந்து தொழிற்சங்கங்கள் விவசாய மக்கள் சமூக அக்கறை உடையவங்க இவங்க எல்லாம் வந்து ஒரு பொது உடைமை இயக்கங்கள் பின்புலத்துல முற்போக்கு இயக்கங்கள் பின்புலத்துல போராடி உருவாக்கப்பட்டு ரஷ்யாவின் மாதிரியே கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் இருந்துச்சு இல்ல 

அது எல்லாத்தையும் இல்லாம ஆக்குறது 


இப்ப கூட மோடி அரசு தேர்தலுக்கு முன்னாடி 2024 2025க்குங்கிற வகையில வந்து வாரணாசியிலிருந்து கோயம்புத்தூர் வரைக்கும் இருக்கக்கூடிய விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் எல்லாம் விக்கிறதுக்கு 7 லட்சம் கோடி ரூபாய்க்கு பிளான் பண்ணிட்டு வந்திருக்காங்க


 ஓகேவா இதை இதை காலி பண்றது மட்டுமில்லாம ஒரு நாட்டுல வந்து இருப்புத்தொகைன்னு ஒன்னு இருக்கும் தங்க கையிருப்பு கரன்சியா கையிருப்பு இதெல்லாம் சேர்த்து இருப்புத்தொகைன்னு இருக்கும்


 அந்த இருப்பு தொகை எதுக்குன்னு சொன்னா ஒரு உலக நெருக்கடி வந்துச்சுன்னா அதை எப்படி சமாளிக்கிறதுங்கிறதுக்காக 

ஒரு நம் நாட்டின் மீது தேவையில்லாம போர் தொடுக்கப்பட்டா அந்த நிலைமைகளை சமாளிக்கிறதுக்காக அல்லது உலகத்துல எங்கேயோ மூன்ற போர் வந்து நம்மள வந்து ஏதோ ஒரு வகையில பாதிப்படைய செய்யும் அப்படிங்கிற நிலைமைகளை சமாளிக்கிறதுக்காக அந்த இருப்புத்தொகை இருக்கும் 

கிட்டத்தட்ட மோடி அரசாங்கம் வந்த பிறகு இந்தியாவினுடைய இருப்புத்தொகையா ரிசர்வ் வங்கி வச்சிருந்ததை படிப்படியா பாதிக்கு மேல காலி பண்ணிருச்சு

 கடந்த ஆண்டுல மட்டும் 87000 1416 கோடியை வந்து அபகரிச்சிருக்குது இதெல்லாம் வந்து இந்தியா ஒரு கடுமையான நெருக்கடிக்குள்ளார இருந்துட்டு இருக்குது அதை தான் வந்து அவரு பரகலா பிரபாகர் இருக்கிறார்

 இல்லையா அவர் என்ன சொல்றாருன்னா

 இந்தியா நிம்மதியை இழந்துட்டு இருக்குது இந்த நிலையில அப்படின்னு அவர் சொல்றாரு இன்னும் சில பொருளாதார அறிஞர்கள் எல்லாம் இருந்ததுன்னா இந்த நிலை நீடிக்குமானால் நம்ம நாட்டு மக்கள் எல்லாருமே வந்து கார்ப்பரேட் ஜமீன்தார்களிடம் அந்த ஜமீன்தார் ரொம்ப முக்கியம் முக்கியமானது 

தோழர் ஏன்னா அடிமைத்தனம் பண்றது 

நில உடமையினுடைய அடிமைத்தனம் நமக்கு தெரியும் தானே எவ்வளவு அழகா பொருளாதார அறிஞர்கள் சொல்றாங்க பாருங்க 

கார்ப்பரேட் ஜமீன்தார்களிடம் மக்கள் அடிமையாக போயிடுவாங்க அப்படிங்கறத வந்து சொல்றாப்புல இப்படி இருக்கும்போது இதுல இந்த நிலைமைகள் எல்லாத்தையும் மக்கள் உணர முடியாத வகையில வந்து அவங்களை

 நுகர்வோர்களாக ஒரு கடனாளி சமூகமாக கடன் வாங்கி வாழக்கூடிய முறைக்கு கொண்டு போயிருக்காங்க மட்டுமில்ல நாட்டுல என்ன நடக்குதுங்கிறதை தெரியாம இருக்கிறதுக்கு தான் அவங்ககிட்ட வந்து பாசிச கட்சிகளை ஆட்சிகளை வந்து கொண்டு வந்து கார்ப்பரேட் தானே கொண்டு வந்து திணிச்சது மோடியை ப்ரொமோட் பண்ணது 

நம்ம ஆளுங்க எல்லாருமே இப்ப வரைக்கும் வந்து பேசிட்டு இருக்கிறதை பார்த்தா நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் அதாவது வந்து மோடி தன்னை முன்னிறுத்துகிறார் மோடி வந்த பிறகு ஆர்எஸ்எஸ் குள்ளார பயங்கர பிரச்சனை ஆயிடுச்சு ஆர்எஸ்எஸ் தாண்டி இவர் பயணிக்கிறார் அப்படிலாம் ஒரு வெங்காயமும் இல்ல

 தோழர் ஆர்எஸ்எஸ் கிட்ட சொல்லி அவர் வந்து பிரசாந்த் கிஷோர் சொல்லுவாப்ல மோடியை பிரதமர் ஆக்குவதற்கு ஆர்எஸ்எஸ் இடம் நாங்கள் வந்து படாத பாடுபட்டு அவங்களை ஏத்துக்க வச்சோம் ஏ

ன்னா உலக முதலாளித்துவம் எல்லாமே மோடியை முன்னிறுத்த சொல்லுது ஏன்னு சொன்னா இங்க ஈவு இரக்கமற்ற ஒரு பிரதமர் வேணும்

 இங்க இருக்கக்கூடிய மாநில அதிகாரங்களை பறிக்கிறதுக்கான வகையில் இருக்கணும் 

கொஞ்சம் கொஞ்சம் இருக்கக்கூடிய மாநில உரிமைகளையும் வந்து பறிக்கக்கூடியவங்களா இருக்காங்க என்ன நடந்தாலும் அதை வந்து கரா ஒடுக்குறவரா இருக்கணும்

 அப்படிங்கிற வகையில ஒருத்தரை தேடுன போதுதான் அதுக்கு முன்னாடியே வந்து உலக முதலாளித்துவம் எல்லாம் பிஜேபியை பார்த்து பார்த்திருக்குது பிஜேபில இருந்து வாஜ்பாயை பார்த்திருக்குது 

வாஜ்பாயால எல்லாம் இந்த மாதிரி எல்லாம் நடந்துக்க முடியாதுங்கிற பரிசீலனையிலிருந்து தான் மோடியை தேர்ந்தெடுக்கிறாங்க 

மோடியை முதல்ல ப்ரொமோட் பண்ணது வந்து இந்தியாவுக்குள்ளார இல்ல 

அது வாஷிங்டன்ல நீங்க வந்து இந்தியால நிதி ஆயோக் உருவாக்கப்பட்ட அந்த நிதி ஆயோக்கோட துணைத் தலைவர் எப்பவுமே பிரதமர் தான் 

அதுக்கான நிரந்தர தலைவர் அதுக்கு துணைத் தலைவர் என்கிற வகையில வந்த முதல் அரவிந்த் பனகாரியார் தான் வந்து வெளிநாட்டுல அவர் அப்ப வந்து அமெரிக்கால ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியரா இருக்கிறார்

 அவர்தான் அங்கிருந்து கட்டுரைகளா எழுதுறாரு அதுக்கப்புறம் அமெரிக்க நிறுவனங்கள் இவரை பூஸ்ட் பண்ணுது 

அமெரிக்க நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து தான் நம்ம ஆளு பிரசாந்த் கிஷோரை வந்து இங்க அனுப்பிவிட்டாங்க 

அவர் அவரோட சேர்ந்த வகையில மோடியோட தங்கி அவரை தயாரிச்சாரு மோடி எப்படி நடக்கணும் உடுத்தணும் என்ன பேசணும் அவர் எப்ப வந்து எப்படியான ஸ்டைல்ல எல்லாத்தையுமே பண்ணது பூரா பிரசாந்த் கிஷோர் பண்ணாப்புல

 இப்படி திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஒரு நபர் அது ஆர்எஸ்எஸ் ஓட அனுமதியில நடந்துச்சு இன்னொரு ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க

 ஆர்எஸ்எஸ் சமூகத்தில் நடக்கக்கூடிய அக்கிரமமான விஷயங்களை செய்யறதுக்கான வகுப்பாடுகளை அது தீர்மானிக்கும் 

ஆர்எஸ்எஸ் லயே இருந்தாலும் சரி பிராமணர்கள் நேரடியாக ஆட்சி அதிகாரத்துல உட்கார்ந்துட்டு பிராமணன் வந்ததுனால இப்படி ஆயிடுச்சுன்னு சொல்றதுக்கு அது வழிவகுக்காது அந்த வகையில வந்து அது பிராமணர் இல்லாதரை தான் அதிகாரத்தில் வச்சு பழியை பூரா அந்த மக்கள் மேல வந்து அந்த அந்த பிராமணர் இல்லாதவர் மேல இப்ப மோடி மேல போடுறாங்களே எல்லாத்துக்கும் காரணம் மோடி அப்படின்னு அப்படின்னு போட்டு அது யாரா வேணாலும் பலி கொடுக்கும்

 அது நமக்கு தெரிஞ்சது தானே நாதராம் கோட்சை வரைக்கும் பலி கொடுக்கிறது தானே அது அதனுடைய வேலை திட்டம் அப்படிங்கிற வகையில இப்படி தயாரிச்சு கொண்டு வந்து மக்கள் மத்தியில பாசிச ஆட்சியை நிறுவி இருக்கிறாங்க

 இது எல்லாம் சேர்ந்து மக்களை குழப்பத்துல வச்சிருக்குது இப்ப நமக்கு முன்னாடி இருக்கக்கூடிய சவால் சவால் என்னன்னா இந்த தேர்தலையும் கொஞ்சம் பார்த்துட்டு

 போயிடலாம் இப்ப இங்க தமிழ்நாடு மாதிரியான ரெண்டு மூணு இடங்கள்ல வந்து தேர்தல் முடிஞ்சிருச்சு இன்னும் ஒரு அஞ்சு கட்டத்தை தேர்தல் இருக்குதுங்களா இந்த அஞ்சு கட்ட தேர்தல்ல வந்து பாஜாக என்ன விருப்பப்படுதுன்னு சொன்னா ஒரு கார்ப்பரேட்டோட நலனையும் அதோடு இணைஞ்ச காமி நலனையும் வந்து இது பண்றதுக்காக அவங்க வந்து பெரும்பான்மையான வகையில வெற்றி பெறுவது அதான் அவங்க சொன்னாங்க இல்ல 420க்கும் மேல அப்படிங்கிற விஷயத்தை ஏற்கனவே அவங்க இப்பவே கூட அப்படித்தான் பண்ணாங்க என்ன பண்ணாங்கன்னா வந்து ஒவ்வொரு மக்கள் விரோத சட்டங்களையும் நிறைவேற்றும் போது எதிர்க்கட்சி எம்பிக்களை எல்லாம் வந்து இடைநீக்கம் பண்ணி அவங்களை வெளியில தள்ளிக்கிட்டு ஒரு ஜனநாயகமற்ற முறையில தான் வந்து எல்லா சட்டங்களையுமே மசோதாக்களையுமே பாஸ் பண்ணிட்டு இருக்காங்க


 இனியும் வந்து இந்த அவஸ்தை எதுக்கு இவனை இருந்தா தானே பிரச்சனை இவனை வந்து வெளியேத்துறது 420 கேள்வி கேக்குறதுக்கே நாதி இல்ல நாங்க தான்டா எல்லாத்தையும் செய்வோம் அப்படிங்கிற வகையில அவங்க எதிர்பார்க்கிறாங்க அது நடக்காதுன்னு நம்ம ஆளுங்க ஒரு விதத்துல வந்து ஏதோ ஒரு நம்பிக்கையோட இருக்கிறாங்க இந்த நம்பிக்கை பலன் அளிக்கட்டும் அப்படிங்கிற இதுதான் வந்து ஆவல்தான் நமக்கு இருக்குது


 சரி ரைட் ஒருவேளை அவங்க ஜெயிச்சிட்டாங்கன்னா குறைந்தபட்ச அளவுல ஜெயிச்சிட்டாங்கன்னா கார்ப்பரேட் நலன்களை எல்லாம் கை கழுவி விட்டுருவாங்களா உங்களுக்கு அதுக்கும் இன்னொரு விஷயத்தை இது பண்ணுங்க 

இந்தியாவினுடைய பொருளாதார நலன்களை எல்லாம் தீர்மானிப்பதற்கான உலகளாவிய கன்னிகளில் மிக முக்கியமானது ஜி20 நாடுகளுடைய சபை


 இந்த ஜி20 நாடுகள் தான் வந்து இந்தியாவுடைய பொருளாதாரம் என்ன இருக்கணும் இங்க வந்து ஜிஎஸ்டி முறையை ஏன் கொண்டு வரணும் நீங்க பணமில்லா பரிவர்த்தனைக்குள்ளார இந்த மக்களை கொண்டு போறதுக்கு நீங்க வந்து வந்து அனைவருக்கும் வங்கி கணக்கு விஷயத்தை வந்து எப்படி நிறைவேற்றணும் அதுக்கு பின்னாடி பணமிப்பு மதிப்பிழப்புக்கு நடவடிக்கை எப்படி பண்ணனும் இப்படி எல்லாம் பண்ணது ஜி20 நாடுகளுடைய கூட்டமைப்புல


 அதுக்கான ஆதாரங்களை நாம புத்தகம் வரைக்கும் போட்டிருக்கிறோம் 


அதெல்லாம் எல்லாரும் பார்த்தாங்களா இல்லையான்னு தெரியாது ஆனாலும் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிட்டு போயிடுறேன் 


எல்லாருமே நம்ம ஆளுங்க உட்பட என்ன சொன்னாப்ல மோடி கிறுக்குத்தனமா ஒரு விஷயத்தை பண்ணி மக்களை எல்லாம் வந்து இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில வந்து பண்ணிட்டாப்ல அந்த ஆளு ஒரு தான் தோன்றின்னு சொன்னால அவன் தான் தோன்றித்தனமா வருவது பண்ணாரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கங்கள் அதனால இருக்கக்கூடிய பிரச்சனைகளை இது பண்றதுக்காக வந்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்துச்சு


 அதுல வைக்கப்பட்ட முக்கியமான வாதம் என்னன்னு சொன்னா மோடி தான் தோன்றித்தனமாக இந்த பிரச்சனைகளை செய்ததுனால வந்து அது வந்து மிகப்பெரிய கேடு விளைவிச்சிருச்சுன்னு 


ரிசர்வ் வங்கி வந்து உடனே சொல்லுச்சு அப்படிலாம் இல்லைங்க எங்க கிட்ட பல மாசமா அவங்க பேசி தான் இதை வந்து நடைமுறைப்படுத்தினாங்க


 இந்த விஷயத்தை அது அந்த பணமதிப்பிழப்புக்கு நடவடிக்கை நடந்த ஒரு வாரத்துல இருந்து நம்ம உயிரை கொடுத்து பேசிட்டு இருக்கிறோம் இன்னைக்கு வரைக்கும் நம்ம ஆளுங்க திருந்தலைங்க அந்த உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கை கமனத்திலேயே எடுக்கல மோடி அப்படி பண்ணிட்டாப்ல மோடி அப்படி பண்ணிட்டாப்ல அதாவது ஒரு ஆளும் வர்க்கங்களுக்கு இடையில காவி பாசிசம் இருக்கிறது எல்லாம் கரெக்ட்


 அது கார்ப்பரேட்டோட இணைஞ்ச வகையில ரெண்டு நலனும் பொருந்தி போனா மட்டும்தான் ஒன்ன ஒன்னு அனுசரிக்கும் கூட புரியாத அளவுல நம்ம ஆளுங்க இப்படி மழுங்கி போயிட்டா என்ன பண்றது 


அந்த ஜி20 நாடு உடைய கூட்டமைப்பு கூட்டம் கடந்த ஆண்டு 2023 செப்டம்பர்ல நினைக்கிறேன் 

இந்தியால தான் நடந்துச்சு அதை கூட மோடி வந்து தனக்கான கிரெடிட்டா உருவாக்கிகிட்டாப்ல நான் வந்து பிரதமர் ஆன உடனே வந்து ஜி20 நாடுகளுடைய தலைவராக என்னை ஏற்றுக்கொண்டார்கள் அதனுடைய கூட்டம் இந்தியாவில் நடக்குது 


அதுல எவ்வளவு கேவலம் எல்லாம் பொய் சொல்ல முடியுமோ அவ்வளவுத்தையும் அந்த ஆள் பண்றாப்ல நம்ம ஆளுங்க எதையுமே உடைக்கல


 ஜி20 நாடுகளுக்கு வந்து ஒரு வருஷத்துக்கு ஒரு முறை ஒரு நாடு தலைமை தாங்கும் அந்த நாடுதான் வந்து அந்த நாட்டினுடைய பிரதமர் அல்லது அங்க இருக்கக்கூடிய அதிபராட்சி இருந்தா ஜனாதிபதி அவங்கதான் வந்து அந்த கூட்டமைப்பு தலைவரா இருப்பாங்க

 அந்த நாட்டுல தான் அடுத்த கூட்டம் நடக்குங்கிறது வந்து காலாகாலமா பின்பற்றக்கூடிய வழிமுறை

 அப்படி அவர் பண்ண அந்த 2023 கூட்டத்துல மூன்று முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்குது 

வரி அமைப்பை புனரமைத்தல் உங்களுக்கெல்லாம் தெரியும் நான் ஏற்கனவே சொன்னது நம்ம ரொம்ப சுருக்கமா பேசிட்டு இருக்கிறோம் 

இந்த விஷயம் எல்லாம் நாட்கணக்குல விவாதிக்க கூடியது இந்திய அரசுக்கு வந்து எந்த வகையிலும் வந்து வருமானம் இல்லை இது வந்து


 வருமானத்துக்காக மேலும் மேலும் புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டி இருக்குது அதனால மக்கள் மேலதான் அதனுடைய சுமையை சுமத்துறதுக்கு இருக்குது

 கார்ப்பரேட்டுகளுக்கும் பெரிய பெரும் பணக்காரர்களுக்கும் அது எந்த வகையிலும் எதுவும் பண்ண போறதில்லை அப்ப திரும்ப இந்த அரசு இயங்குறதுக்கு என்ன செய்றது வரி அமைப்பை புனரமைத்தல் இதுக்குள்ளார ஒன்னு புரிஞ்சுக்கோங்க 


பிஜேபியை நமக்கு பிடிக்காது தான் ஆனா அது ஒரு விவாதத்தை எழுப்பி விட்டுருக்குது 


அதாவது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துட்டாங்கன்னா அவங்க வந்து பரம்பரை சொத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றும்போது அதுக்கான சிறப்பு வரியை வந்து உருவாக்குவாங்க

 இந்த வரி வந்து 1985 வரைக்கும் இருந்துச்சு

 ராஜீவ் காந்தி காலத்துல தான் அதை வந்து நீக்கப்பட்டதுங்கிறது எல்லாம் வேற கதை

 ஆனா அப்படி ஒரு முறை காங்கிரஸ் வந்தா வந்துரும் அப்படின்னு சொல்றாங்க அந்த வரிதான் வர்மான்னு தெரியாது 

ஆனால் காங்கிரஸ் வந்தாலும் சரி பிஜேபி வந்தாலும் சரி இந்த நாட்டினுடைய அரசாங்கம் இயங்குறதுக்கு மேலும் வரிவிதிப்பு தீவிரமாகும் ஒன்னு ஆச்சுதுங்களா

 அதை ஜி20 நாடு வலியுறுத்துது 

இன்னொன்னு எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக எல்லா இயற்கை வளங்களையும் பயன்படுத்துவது அப்படின்ட்டு உங்களுக்கு புரியுதா

 மணிப்பூர்ல இன்னைக்கு நடந்துட்டு இருக்கக்கூடிய கலவரம் அந்த மணிப்பூர் மண்ணுக்கு கீழ இயற்கை வளங்கள் கொட்டி கிடக்குது 

தமிழ்நாட்டுல வந்து மீத்தேன் மாதிரியா சேலம் தர்மபுரி சைடுல வந்து கனிம வளங்கள்ல இரும்பு உட்பட பிளாட்டினம் வரைக்கும் இருக்குது

 நம்ம மாநிலம் மட்டும் வந்து விதிவிலக்குல இது மாதிரி பல விஷயங்கள் இருக்குது 

ஆனா என்ன இருக்குதுன்னா மணிப்பூர் மாதிரியான கிராமங்கள் சிறப்பு அதிகாரத்தை கொண்டிருக்குது உடைய மக்களுடைய வாழ்வை அந்த மக்களே தீர்மானிப்பாங்க

 இந்தியாவுக்குள்ளார பழங்குடி மக்களுடைய வாழ்க்கையை வந்து குறைந்தபட்சம் பாதுகாக்குறதுக்கு வனப்பாதுகாப்பு சட்டம் அப்படின்னு ஒன்னு இருக்கிறதாக நாமெல்லாம் ஏத்துக்கிட்டு இருக்கிறோம்

 தமிழ்நாடு மாதிரியான பழங்குடிகள் குறைவா இருக்கக்கூடிய பகுதிகள் எல்லாம் அந்த வன பாதுகாப்பு சட்டம்தான் அந்த பழங்குடிகளுக்கு மலைவாழ் மக்களுக்கு எல்லாத்துக்கும் வந்து குறைந்தபட்ச உரிமையை கொடுக்குது 

ஆனா வடகிழக்குல இருக்கக்கூடிய மக்களுக்கு மணிப்பூர் மாதிரியான மக்களுக்கு வந்து வனப்பாதுகாப்பு சட்டம் அவசியப்படல 

ஏன்னா அந்த மக்கள்தான் அந்த மக்களுடைய வாழ்வாதாரங்களை ஒழுங்குபடுத்துறாங்க அங்க அவங்களுடைய சட்டம் இருக்குது 

சிறப்புரிமை வாய்ந்தவர்கள் அங்க நிலங்களை எல்லாம் போய் யாரும் வாங்க முடியாது

 இப்படி எல்லாம் இருக்கக்கூடிய இடத்துல இவன் என்ன சொல்றான்னா எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக இயற்கை வளங்களை முழுக்க கொள்ளை அடிக்கிறது 

இதுக்கு வந்து மோடி ஏற்கனவே ஒரு சிறப்பு மசோதாவை தாக்கல் பண்ணிட்டாப்ல

 அது என்னன்னு சொன்னா இரு நாடுகளுக்கு இடையில் இருக்கக்கூடிய எல்லையிலிருந்து 100 km-க்கு உள்ளார இருக்கக்கூடிய எல்லா வளங்களையும் எல்லா நிலங்களையும் அரசு தன்னுடைய தேவைக்காக என்ன வேணாலும் செய்யலாம் 


அப்படின்னு ஒரு மசோதா பாஸ் ஆயிருக்குது நீங்க இந்த நாடுகளுக்கு இடையில இருக்கக்கூடிய எல்லையிலிருந்து 100 km சொல்லிட்டீங்கன்னா மணிப்பூர் மிசோரம் நாகாலாந்து இப்படின்னு சொல்லக்கூடிய அந்த செவன் சிஸ்டம்ஸ் ஏழு சகோதரிகள் 

அதெல்லாம் சின்ன மாநிலம் தோழர் அதனுடைய சுற்றளவே அவ்வளவு கிடையாது முழுக்க காலி ஆயிடும் 

இந்த இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிறது இதுக்கு எல்லா வகையிலயும் ஏற்ற வகையில் 

டிஜிட்டல் கட்டமைப்பை மேம்படுத்துவது இதற்கான வகையில் உலகளாவிய அளவில் என்ன சொல்றது உள் கட்டமைப்பை சீரமைக்கிறது புரியுதுங்களா 

அவன் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டு போறதுக்கு உள் கட்டமைப்பு அவன் எங்கிருந்து எதுக்கு டெண்டர் எடுக்கணும்

 என்ன பேசணும் எது பண்ணனும் எந்த இடத்தை தேர்வு பண்ணனுங்கிறதுக்காக டிஜிட்டல் முறையை இயற்கை வளங்களை எல்லாம் கேள்வி கேட்க நாதி இல்லாம எடுத்துட்டு போறது 

வரி அமைப்பை வந்து மக்கள் தலையில சுமத்துறது இப்படி வந்து கடந்த 2023ல ஜி20 நாடுகள்ல தீர்மானம் நிறைவேற்று இருக்குது 

அது ஒரு வருஷம் ரெண்டு வருஷம் 10 வருஷம் கழிச்சாலும் இந்த உற்பத்தி முறை நீண்டுட்டு இருக்கும்போது இதுதான் நடக்கும் 

இதுதான் நமக்கு முன்னாடி இருக்கக்கூடிய சவால்

 இப்போ பிஜேபி ஜெயிக்குது தோக்குது காங்கிரஸே வந்துருச்சுன்னு வச்சுக்கோங்க வச்சுக்கோங்க 

என்ன பண்ணும் புதிய பொருளாதார கொள்கை என்கிற வகையில நடந்துட்டு இருக்கக்கூடிய இந்த மனித ஆற்றல்களை உள்ளிழுக்காத இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிற கடன் கடன் மேல் கடன் குசுமத்தி ஒரு நாட்டை வந்து கொள்ளையடிக்கிற இந்த உற்பத்தி முறையிலிருந்து மாற்றுவதற்கு ஏதாவது வழிமுறையை வச்சிருக்காங்களா 

அல்லது 

இவர்கள் இந்த அரசு இயங்குவதற்காக சில நாடுகள் எல்லாம் சில விஷயங்களை வச்சிருக்குது மனித ஆற்றல்களை உள்ளெழுக்காத உள்ளுக்குள்ள அதிகமாக ஈர்க்காத தொழில்முறை இருந்ததுன்னா அதுக்கு வந்து அதிகபட்ச வரி விதிக்கிறது அப்படின்ட்டு அது மாதிரி ஏதாவது பண்ணிட போறாங்களா


 எந்த வாய்ப்பும் இல்லை 

நம்பிக்கையே இல்லை 

இது எல்லாம் மக்கள் மேல வந்து விடியும் இந்த மக்களை அப்படி விடியும் போது பிஜேபி ஆட்சியில இல்லாம இருந்தாலும் நாட்டுல அது வந்து செல்வாக்கு செலுத்தும்

 அதனுடைய அடித்தளம் அழிஞ்சு போகாது

 தமிழ்நாடு போய் எடுத்துக்கிட்டீங்கன்னா தமிழ்நாடு இது வரைக்கும் வந்து பிஜேபினுடைய வாக்கு வங்கியை நம்ம வந்து நோட்டாக்கு கீழ வச்சுக்கிட்டு அதை ஏதோ சொல்லிட்டு இருக்கிறோம்னு வச்சுக்கோங்க ஆனா இந்த வாட்டி அது எல்லா இடத்திலும் குறைந்தபட்ச

 வாக்கு விகிதத்தை வாங்கும்

 அப்படி வாக்கு விகிதத்தை வாங்குவதற்காகத்தான் அண்ணா திமுகவை மூன்றாக பிரித்து அது கையாண்டுது 

அண்ணா திமுகவை அதுதான் கையாண்டுச்சு மோடிக்கும் எடப்பாடிக்கும் அதிமுகவுக்கும் பிஜேபிக்கும் எந்த முரண்பாடும் கிடையாது 

அதிமுகவுக்கு அதாவது எடப்பாடி தலைமையிலான அதிமுகவுக்கு கொடுத்த அசைன்மென்ட் என்னன்னு சொன்னா தேர்தலை நீ தனியா சந்தி ஆனா தீவிரமா சந்திக்க கூடாது

 வேட்பாளர்கள் வந்து பிரபலமா இருக்கக்கூடாது பெரிய செலவு பண்ணக்கூடாது வாக்கு கேட்கிறதுல பெரிய எதிர்க்க கூடாது கண்ணும் காணாமல் போயிடணும் 

அதே ஏற்கனவே என்ன பண்ணிட்டாங்க தினகரனையும் ஓபிஎஸ்யும் சுயட்சைக்கு கீழ கொண்டு போட்டாச்சு என்கிற வகையில அரசியல் அரங்கத்துல திமுகவுக்கு அடுத்தாப்புல வந்து பிஜேபி என்கிறதை அரசியல் களமா மாத்திட்டாங்க

 தவிர்க்க முடியாம அவங்க வந்து ஓட்டுவாங்க வாங்குவாங்க அரசியல் சக்தியாக நிப்பாங்க 

அதுக்கு பின்னாடி வந்து இங்க இருக்கக்கூடிய அதிகார வர்க்கத்தினுடைய பிரதிநிதிகள் அவங்க வந்து பின்புலமா இருப்பாங்க 

உங்களுக்கு எல்லாத்துக்கும் நம்ம இங்க வந்து ஆர்எஸ்எஸ் கட்சி கட்டிருச்சா அமைப்பு கட்டிருச்சா பிஜேபி கட்டிருச்சா இப்படி எல்லாம் வந்து நம்ம பார்த்து தெளிவடையறதுக்குள்ளார வயசாகி செத்துப் போயிருவோம்

 தோழர் ஆனா அவங்க என்ன பண்ணி இருக்காங்கன்னா கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல வந்து கல்வி நிறுவனங்களை நடத்துறாங்க

 அது மூலமா வரக்கூடிய முக்கியமான நபர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு துறையிலும் வைக்கிறாங்க

 அப்படித்தான் இன்னைக்கு நீதித்துறையிலிருந்து எல்லா துறையும் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குது 

நீங்க சமீபத்துல ஒரு புத்தகம் வந்துச்சு யாருக்காவது வாய்ப்பு இருந்தா அந்த புத்தகத்தை வாங்கி படிச்சு பாருங்க

 குருமூர்த்தி ஆர்எஸ்எஸ்ன் நிழல் அதிகாரம்

 இந்த ஆள் வந்து தமிழ்நாட்டுல வந்து பானாம்பட்டி அப்படின்ற ஒரு கிராமத்துல இருந்தவர்

 குருமூர்த்தி இவரு படிக்கிறதுக்கு வராரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தோட இது பண்றாப்புல ஆர்எஸ்எஸ் அவங்க வந்து கவனமா கையாளுறாங்க ஒரு ஒரு கல்வி நிறுவனத்துல வந்து 500 ஆயிரத்துக்கு மேற்பட்ட

 மாணவர்கள் இருந்தாலும் யாருடா அதுல வந்து வந்து அப்படி கில்லி மாதிரி இருக்கிறான் அப்படின்னு பார்த்து கண்டுபிடிக்கிறதுல

 இவர்ட்ட வந்து ஒரு தனித்திறமை இருக்கிறதை கண்டுபிடிக்கிறாமல இவரை கணக்காளர் முறைக்கு வந்து படிக்க வைக்கிறதுக்கே ஆர்எஸ்எஸ் தான் வழிகாட்டுது இவரு நாட்டுல செய்தது முழுக்க அயோக்கியத்தனம்

 கோயங்காவோட சேர்ந்த வகையில வந்து பெருமுதலாளிகள் எப்படி அரசியல் செய்றாங்க என்ற வகையில அவங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய போட்டியை பயன்படுத்திக்கிட்டு காங்கிரஸுக்கு எதிராக வந்து ஒரு வலைப்பின்னலை உருவாக்கி


 ராஜீவ் காந்தி கொலை வரைக்குமாக இருக்கக்கூடியதுல இவருக்கும் பங்களிப்பு இருக்குது அப்படின்னு சந்தேகிக்கப்படுது


 விபி சிங் ஆட்சி அகற்றப்பட்டதை நான்தான் செஞ்சேன்னு அவர் வந்து தைரியமா சொல்றாப்ல 

இது வந்து இந்த புத்தகம் வந்து அவர் அவருடைய ஒப்புதல் வாக்கு மூலம் அவர்ட்ட பேட்டி எடுத்தது அது ஆங்கிலத்தில் இருந்ததை தமிழ்ல ஆங்கிலத்துல சுஜாதா சிவஞானம் அவங்க பண்ணத வந்து கட்டுரைகளா வந்ததை வந்து


 பேராசிரியர் சே கோச்சடை தமிழ்ல பண்ணி இருக்காப்ல


 இப்படி வந்து அவங்க எல்லா வகையிலும் ஆளுங்களை வச்சிருக்காங்க 

அதுல நிர்வாகத் துறையில் ஆர்எஸ்எஸ் செல்வாக்கு செலுத்தும் அதனால பிஜேபி வந்து ஆட்சி அதிகாரத்தில் இல்லைனாலும் நிர்வாகத் துறையில் இணைந்த வகையில வந்து அது அரசியல் களத்துல கலைபரங்களை உருவாக்கும்

 மக்கள் மிகவும் மோசமான ஏன்னா இன்னைக்கு இருக்கக்கூடிய இந்த பொருளாதார மந்த நிலை நாம திரும்ப திரும்ப அதை தான் சொல்றோம் இந்த பேச்சுல வந்து பொருளாதார மந்தநிலை வந்து மேலும் அதிகரிக்கத்தான் போகுது 

இந்தியா வந்து அதுல பொருளாதார நெருக்கடியை வந்து அதிகமா சந்திக்கத்தான் போகுது அது வந்து இதுல இருந்து மீள்றதுக்கான எந்த வழிமுறையையும் கொண்டிருக்கல அதனால வந்து இங்க மீழ்றதுக்கான வழியே இல்லை அந்த சுமை பூரா மக்கள் மேல தான் வரப்போகுது மக்கள் மேல வரும்போது அதை திசை திருப்புறதுக்கு ஆளும் வர்க்கத்துக்கு பிஜேபி ஆளுங்கட்சியா இருந்தாலும் எதிர்கட்சியா இருந்தாலும் ஆளும் வர்க்கத்துக்கு அது அவசிய தேவை அதை களமாடுறதுக்கு அனுமதிக்கும் அதுக்கு பின்னாடி நின்னு அதுக்கான எல்லா வேலையும் செஞ்சு கொடுக்கும்

 அப்படித்தான் ஏற்கனவே வந்து நீங்க வந்து பாபர் மசூதி இடிப்புக்கு பின்னாடி வெறும் ஆர்எஸ்எஸ் மட்டும் அதை செய்யல 

முதலாளிகள் விரும்பலைன்னா அந்த நடவடிக்கை எல்லாம் ஈடுபட முடியாது 

ஒரு சந்தையை வந்து இவன் நிலைய செய்றான்யா இவனால பிரச்சனையா இருக்குது அந்த இயக்கத்தை தடை பண்ணுன்னு சொன்னா அடுத்த நிமிஷம் தடை பண்ணிருவாங்க 

ஆனா ஆர்எஸ்எஸ் அதை தடை பண்ணலையே மசூதி இடிக்க பாபர் மசூதி இடிக்கிற வரைக்கும் ஒன்னும் பண்ணப்படலையே அவங்க மேல பெரிய வழக்குகள் எல்லாம் ஒன்னும் போடப்படலையே 

ஏன் 

ஆளும் வர்க்கத்துக்கு அது தேவையா இருந்தது 

இந்த நிலை திரும்பவும் நீடிக்கும் இப்ப மக்களுடைய வாழ்க்கையை மீட்க இந்த சிக்கலுக்கெல்லாம் காரணமான பொருளாதார நிலைமையை மீட்க கம்யூனிஸ்டுகள் என்ன செய்யப்போறோம் 

நம்மகிட்ட அது பற்றியான என்ன கண்ணோட்டம் இருக்குது

 நடக்கக்கூடிய இந்த இந்த அனைத்தும் தழுவிய வகையில பிரச்சனையை பார்க்கிறதுக்கு பிஜேபியை வீட்டுக்கு அனுப்பிட்டா வந்து எல்லாம் சரியா போயிடும் நம்ம வந்து ஒரு தக்க வச்சுக்கிறதுக்காக இந்த

 இந்த தேர்தல்ல நம்ம பிஜேபிக்கு எதிரா காங்கிரஸோட அந்த இந்தியா கூட்டணியில இருந்தது ரொம்ப கரெக்ட்

 ஆனா அதை தாண்டி நம்மகிட்ட என்ன இருக்குது

 நாம என்ன திட்டம் வச்சிருக்கிறோம்

 நம்ம ஊழியர்களை எப்படி தயாரிக்கிறோம் 

நம்ம தலைவர்கள் அதை பத்தி என்ன பேசுறாங்க என்ன மேல இருந்துச்சு யார் என்ன பெரிய அறிக்கை விட்டாங்க 

உழைக்கும் மக்களுடைய வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துறதுக்கு நான் இருக்கிறேன் அப்படின்னு சொல்றதுக்கான விஷயம் இவங்க கிட்ட என்ன இருக்குது

 ஜி20 நாடுகளுடைய கூட்டமைப்பிலிருந்து இந்தியாவை வெளியேற்றுவோம் என்கிற வகையில உலகினுடைய சதிவலையிலிருந்து இந்தியாவை மீட்போம்னு சொல்றதுக்கு என்ன இருக்குது 

அவன் ராமர் கோயிலை திறக்கிறேன்னு சொல்றான் இந்த நாட்டு மக்களுக்கு யாருக்கும் கவலை இல்லை 

அது பெரிய இதெல்லாம் ஆகலைங்கிறது எல்லாம் வேற வட மாநிலங்கள்ல ஒன்னு ரெண்டு மாநிலங்களுக்கு தான் அது வந்து செல்வாக்கு செலுத்தி இருக்கிறது

 எல்லாம் வேற விஷயம் ஆனா அவன் ஏதோ ஒன்னு செஞ்சுட்டு இருக்கிறான் அவன் ராமர் கோயில்னு சொன்னபோதே நாம என்ன பண்ணிருக்கணும் ராமா ராமா சோறு போடுன்னு ரோட்ல இறங்கி இருந்தா கோயிலா சோரான்னு அந்த ஜனங்க ரோட்ல வந்து நின்று இருப்பாங்க இல்ல 


எவ்வளவு தொலைவில் இருந்து மக்கள் இங்க வந்து வேலை பாக்குறாங்க

 ஒரு கொரோனா மாதிரியான நெருக்கடியில வந்து நடந்து செத்தாங்களே 

இதுக்கெல்லாம் யார் பொறுப்பு 

அரசு மேல நாம ஆயிரம் குற்றச்சாட்டுகள் எல்லாம் சொல்லலாம் 

ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக கம்யூனிஸ்ட் இயக்கங்களாக இருந்து கொண்டு இதையெல்லாம் தடுக்குறதுக்கோ இதிலிருந்து மக்களை பாதுகாப்புறதுக்கோ நாங்க என்ன செய்ய முடியும்னு கையறு நிலையில நிக்கிறது 

அப்படின்னா அவங்க எல்லாம் கட்சியில இருக்கக்கூடாது

 இதுதான் வந்து பிரச்சனை

 தொடர் நாம வந்து நூறாவது ஆண்டு காலத்தை எதிர்கொள்ளக்கூடிய நிலையில மேலும் மேலும் பொருளாதார நெருக்கடி வந்து அதிகமாயிட்டே இருக்கக்கூடிய நிலையில அந்த பொருளாதார நெருக்கடியை ஆளும் வர்க்கங்கள் வந்து பாசிச கொள்கையால மட்டும்தான் எதிர்கொள்வாங்க என்கிற நிலையில 


நம்ம என்ன மாற்றுத் திட்டத்தை வைத்திருக்கிறோம் என்பதுதான் நமக்கு முன்னாடி இருக்கிற சவாலாக நான் பார்க்கிறேன் 

தோழர்கள் ஏதாவது கருத்து இருந்தா சொல்லுங்க 

நம்ம பேசலாம் நன்றி வணக்கம் 


அதாவது வந்து நான் கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்து ஏதோ மக்கள் விரோதமா போயிடுச்சுன்னு சொல்ல 

நானும் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருக்கிறேன் 

கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகத்தில் அசைக்க முடியாத மறுக்க முடியாத ஆதாரங்களோட ஜனங்களுடைய இதயநாதமாக ஒரு சங்கநாதம் முழங்குகிற அந்த இடத்தை தவற விட்டுட்டோம்

 தோழர்கள் எல்லாம் அப்பாவி இருக்கிறாங்க 

இது நான் வந்து விமர்சனமா வைக்கிறேன் நான் 

அதுக்கு தான் வந்து முதல்ல உங்களுக்கு வந்து பேசத் தொடங்கும்போது இந்த தேர்தல்ல நாம வந்து ஒரு தேர்தல் கட்சியா இருக்கிறோம் 

தோழர் சிபிஐயா இருந்தாலும் சரி சிபிஎம்மா இருந்தாலும் சரி சிபிஐ எம்எல் ஆ இருந்தாலும் சரி சரியா அதுல லிபரேஷனும் அப்படித்தானே சிபிஐ எம்எல் லிபரேஷன் தேர்தல் கூட்டணி தான் வச்சுக்கோங்க 


இந்த கட்சிகள் எல்லாம் தேர்தலை வந்து ஒரு அதுவும் ஒரு பாதையை வச்சிருக்குது 

அப்ப தேர்தல்ல நீங்க வந்து என்னவா இருக்குன்னா தேர்தல்ங்கிறது வெறும் ஓட்டு வாங்குறதும் என்றதுக்கு களம் இல்ல 

தோழர் கம்யூனிஸ்டுகளுக்கு அது ஒரு அருமையான அரசியல் களம் 

அது அந்த நேரத்துல தான் நாம மக்களை வந்து அவ்வளவு பறந்துபட்ட மக்களை வந்து அரசியல் களத்தில் சந்திக்கிறோம்

 அப்ப அவங்களுக்கு வந்து நம்முடைய கொள்கையை நம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான இது அந்த இடத்தை கூட நாம வந்து தவற விட்டுட்டோம் 

அப்படிங்கறத நான் சொல்றேன் நம்ம கூட்டணி கட்சிகள் கூட நாம இருந்தா அந்த தேர்தல் களம் வந்து சிறப்பா இருக்கும் மதிப்பா இருக்கும்னு மேடைகள் வழங்க முடியாத இடத்துக்கு நம்ம தாழ்ந்து போயிட்டோம்னு சொல்றோம்


 நானு அது இது தோழர் நமக்கு இருக்கக்கூடிய பலவீனம் அடுத்தவாட்டி நம்ம இருந்தா ஒரு இடத்துல வந்து மதிப்பு இருக்கும்னு நம்புறவன்ட்ட ஒரு சீட்டு எக்ஸ்ட்ரா கேட்கலாம்

 தோழர் அடுத்தவாட்டி நீங்க இருந்தாலும் இல்லைனாலும் நிலையான பிறகு போயிட்டு அடுத்தவாட்டி ஒன்னுக்கு தான் போய் நின்னுட்டு இருக்கணும் இப்ப ரெண்டுல ரெண்டு கேட்டுட்டு இருக்கோம்

 அடுத்த அவன் ஒன்னுன்னா ஒன்னுதான் நம்முடைய தகுதியை வளர்த்துக் கொள்றதுல தவறுறோம் அதை எங்க தவறுகிறோம் 

அப்படின்னு சொல்லும்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சி வளர்றதுங்கிறது வந்து வெறும் கோட்பாட்டு சூத்திரம் இருந்து இல்ல

 அது மக்களை சிக்கலுக்குள்ளாகக்கூடிய உற்பத்தி முறையை தன்னுடைய கண்ணோட்டத்தில் மக்கள்ட்ட அரசியல் செய்வதன் மூலமாக வளர முடியும் 

அந்த அரசியல் நிலைப்பாடுகளை நிலைப்பாடுகளை உருவாக்குறதுல நாம வந்து பலவீனம் ஆயிட்டோம்

 நம்மகிட்ட தலைமை அதுக்கானதாக இல்லை என்கிற பட்சத்துல மக்களுக்கான சக்திகளாக நாம முன்னாடி இல்ல

 இந்த நிலையில நாம இப்படி இருந்தோம்னா அடுத்து வரக்கூடிய காலகட்டம் இதைவிட மோசமான காலகட்டம் நம்ம உயிரை கொடுப்போம் 

அதெல்லாம் வந்து மாற்றுக் கருத்தே இல்லை தோழர் அறிவியல் பூர்வமா இயங்கக்கூடிய ஒரு கட்சி வந்து கண்ணை மூடிட்டு போய் கடல்ல விழுந்து சாகுறதுல எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை 

இது அரசியல் இது கோட்பாடு இது எங்க நடைமுறை இது எங்க அமைப்பு முறை என்கிற ஒரு ஒரு பலத்தோட போய் நின்னு எதிரியோட மோதி சாகணும் தோழர் அதுதான் கம்யூனிசம் ஜெர்மன் பாசிசம் வருதுன்னு

 சொன்னா பாசிசம் ஜனங்களை எந்த வகையில எல்லாம் பாடாப்படுத்துதுங்கிறத வந்து அதை நேருக்கு நேர் நின்று அதனுடைய அரசியலை கிழிச்சு அதுக்கு பின்னாடி இருக்கக்கூடிய அந்த லாப வெறி வேட்டையை ஜெர்மன் வந்து உலகத்துல ஒரு எல்லாத்தையும் விட முக்கியமான ஒரு ஏகாதிபத்தியமாக மாறுவதற்கான அந்த வெறித்தனத்தை எல்லாத்தையும் ஒழிச்சதுல தான் அந்த இது சரி நம்ம லெனின் தோழரோட வந்து எல்லா வெளியீடுகளையும் எடுத்து பாருங்க


 அவர் கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்லி புத்தகம் எழுதினார் மக்கள் எதிர் ஜார் அரசாங்கத்தை வந்து பாதி ஆட்கள் வந்து இது வந்து நிலபத்துவத்தில் இருக்குது இதை இன்னும் நம்ம வந்து வேற வகையில தான் கையாளனும் இங்க வந்து தனி நபர் அழித்து முக்கியம் அல்லது இதெல்லாம் வேணாம் தேர்தல் பாதை முக்கியம் இப்படி பல்வேறு போக்குகள் போகும்போது தான் வந்து அவர் என்ன பண்றாரு ரஷ்யா ஒரு சமூக ஏகாதிபத்தியமாக மாறிடுச்சுன்னு ஒரு புத்தகம் எழுதுறாரு உலகத்தை நீங்க எந்த வகையில பார்க்கணும்னு

 சொல்லும்போது தான் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தினுடைய உச்சகட்டம்னு புத்தகம் எழுதுறாரு

 பிரச்சனைகள்ல இருந்து கோட்பாட்டை நிலைநிறுத்தக் கூடியவங்களா இருக்குறாங்க அப்படி நம்ம ஆளுங்க வந்து விஷயத்தை பார்க்கணும்னு சொல்றேன் அதுக்குதான் நம்ம எவ்வளவு ஆபத்தான பொருளாதார நிலைமையில நம்ம வந்து இந்த தேர்தல்ல என்னத்தோட நம்ம தோழர்கள் எல்லாம் பேசினாங்கன்னு தயவு செஞ்சு வெறுப்பு வெறுப்பு இல்லாம பாருங்க


 இந்த திமுக அரசு வச்சிருக்கக்கூடிய அந்த இலவசங்களை இதெல்லாம் எவ்வளவு நாளுக்கு தொழ போகும் மேலும் மேலும் கடன் வாங்கிக்கிட்டு நாம நம்முடைய கொள்கையை பேசல திமுகவினுடைய பிரச்சார ஊதுகுழலா இருந்தாலும் அது ரொம்ப வெட்கப்பட வேண்டிய விஷயம் 

தொழ இந்த அரசை இந்த வகையில நாங்க அங்கீகரிக்கிறோம் இது வந்து மற்ற இடத்தை விட பரவாயில்லை இது வந்து தவிர்க்க முடியாததாக இருக்குது இன்னைக்கு நாங்க இந்த விஷயத்தை அங்கீகரிக்கிறோம் எங்க வகையில நின்னுட்டு இது பண்ணுவோம் நாம மேலும் வந்து இது சீர்படுறதுக்கு இந்த அரசு கிட்ட வந்து போராடுவோம் முடியலைன்னா நாங்க வந்து எங்களுடைய கூட்டணி என்கிற

து வந்து ஒரு இது இருக்குது அது வந்து எல்லாத்தையும் விட்டுக்கொடுக்குறதுக்கு இல்ல கூட்டணி என்பது பொது எதிரிக்கு எதிரானது தானே இப்படி இன்னைக்கு வரைக்கும் பேச முடியாத நிலைமைக்கு போயிட்டோம் இது மாதிரி எல்லாம் வந்து கிட்டத்தட்ட ஒரு 23 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்த நிலைமை உருவாகவே இல்லை தோழன் 

நம்ம ஆளுங்க பேசுறது தான் அரசியல் விவாதமா இருந்துச்சு நாம இல்லைன்னா அரசியல் இல்லைன்னு இருந்துச்சு 


நாம இன்னைக்கு அந்த இடத்துக்கு போயிட்டோம் அப்படிங்கிற வருத்தத்தை தான் பதிவு பண்ணேன் அது விமர்சனமா இருந்தாலும் கூட விமர்சனம் தான் இப்ப வந்து நம்ம ஆளுங்களுக்கு இதான் ஒரு பிரச்சனை என்னன்னா

 அந்த அடையாள அரசியல்வாதிகள் இருக்குறாங்க பாருங்க இப்ப ரஞ்சித் வந்து கொஞ்சம் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி வந்து ரஞ்சித் மேடையில வந்து கம்யூனிஸ்டுகளோ முற்போக்காளர்களை எல்லாம் இது பண்ணாங்க நம்ம தலைவர்கள் உட்பட பல பேர்ட்ட நான் பேசுறேன் அவங்க எல்லாருமே என்ன சொல்லி இருக்காங்கன்னா வந்து அதை நட்பு ரீதியாக பாக்கணும் 

அந்த விமர்சனங்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ளனும் வெளியில இருந்து விமர்சனம் வரணும் அப்படின்னு எல்லாம் சொல்லுவாங்க 

ஆனா நம்ம விமர்சிச்சா அது எப்படி பார்ப்பாங்கன்னு தெரியல விமர்சனங்கள் தான் நான் விமர்சனம் வச்சேன்

 நான் கட்சி என்னைக்கும் நேசிக்கிறேன் இந்த கட்சி அழியாமல் காப்பாத்த வேண்டியது நம்முடைய கடமை

 நாம தத்துவ அரசியல் என்கிற ஆயுதம் கொண்ட ஒரு ஆயுதபாணிகளாக இருக்கணும் அதுதான் நமக்கு வந்து போராடுவதற்கான சக்தியை கொடுக்கும்

 அந்த இடத்தை நம்ம தலைவர்கள் கொண்டவர்களாக இல்லை தலைவர்கள் அந்த விஷயத்தை வந்து உள்வாங்கிக்கணும் அவங்க தங்களை அப்படி வளர்த்துக்கணும் புதிய தலைமுறைகளையும் அப்படி வளர்க்கணும்னு எதிர்பார்க்கிறேன் 

வேற நான் கட்சி மேல எல்லாம் வந்து எனக்கு இது கூட இல்லைன்னா வந்து இந்த ஜனங்களை எப்படி காப்பாத்த முடியும் எல்லாம் எனக்கு கேள்வி இருக்குது நான் இந்த பரிதாபத்துல மட்டும் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கல 

கம்யூனிசம் ஒன்னு தான் மக்களுக்கான தத்துவம் அது எத்தனை பின்னடைவுகளை சந்திச்சாலும் அதுதான் எழுந்து நிற்கும் அதுதான் சமூகத்தை மாற்றும் சமூகம் வந்து என்னைக்கும் கம்யூனிசத்தை விட்டுட்டு முன்னேற முடியாதுங்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்குது அதனாலதான் நன்றி

Popular posts from this blog

SAVARKAR-BOOK-FULL

ELON MUSK ON INDIA TODAY

Parankundram